கொரோனா பாதிப்பு எதிரொலி: காய்ச்சல் மாத்திரை வாங்கி செல்பவர்களை கண்காணிக்க உத்தரவு
சென்னையில் காய்ச்சலுக்கான மாத்திரைகள் வாங்கி செல்பவர்களை கண்காணிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
அரசின் அதிரடி நடவடிக்கைகளால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. அதேசமயம் காய்ச்சல் மற்றும் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் எந்தவித தகவலையும் தெரிவிக்காமல் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியானது.
இவர்களை கண்காணிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், மருந்தகங்களில் காய்ச்சலுக்கான பாரசிட்டமால் மற்றும் அன்டிபயோடிக் மாத்திரைகள் வாங்கி செல்பவர்களை கண்காணிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இந்த மாத்திரைகளை வாங்க வரும் வாடிக்கையாளர்களின் போன் நம்பர், முகவரி, இ-மெயில் உள்ளிட்ட விவரங்களை கேட்டு தகவல் அளிக்க வேண்டும் என்று அனைத்து மருந்தகங்களுக்கும் மாநகராட்சி கோரிக்கை விடுத்துள்ளது.