அதிகரிக்கும் கொரோனா... சென்னையில் 9 இடங்களில் கடைகள் செயல்பட தடை
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் மற்றும் வணிக வளாகங்கள் அமைந்துள்ள 9 இடங்களில் கடைகள் நாளை முதல் செயல்பட தடை விதித்து சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா வழிமுறைகளை பின்பற்றுவது தொடர்பான கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, சென்னை காவல்துறை ஆணையாளர் சங்கர் ஜிவால் தலைமையில் நடைபெற்றது.
இதில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கண்டறியப்பட்டுள்ள ரங்கநாதன் தெரு வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை, புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் புருக்லின் சாலை வரை, ஜாம்பஜார் பாரதி சாலை ரத்னா கபே முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை, ஃபக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு ,புலிபோன் பஜாரில் வணிக வளாகம், கொத்தவால்சாவடி சந்தை
ராயபுரம் சந்தை
அமைந்தகரை சந்தை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகளுக்கு நாளை முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி காலை 6 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.