சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் இன்று தாக்கல்!
சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் இன்று மேயர் பிரியா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் வரவு செலவுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் உள்ள மாமன்ற கூட்டரங்கில் நாளை காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது.
இந்த கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தலைமை தாங்குகிறார்.துணை மேயர் மு.மகேஷ்குமார்,கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முன்னிலை வகிக்க உள்ளனர்.
இந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சியின் இந்த நிதியாண்டுக்கான 2022 - 2023க்கான வரவு - செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்பட உள்ளது.
சென்னை மாநகராட்சியின் வரவு - செலவு கணக்குகள் குறித்தான விவாதம் இன்று மதியம் நடைபெற உள்ளது. திமுக கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் பெரும்பான்மையாக உள்ளதால்,
இந்த பட்ஜெட்டில் இடம்பெரும் அறிவிப்புகளை பெரும்பான்மையானோர் ஏற்றுக் கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.