சென்னை 2.0 திட்டம் : சென்னை மாநகராட்சி பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்ன தெரியுமா ?

By Irumporai Mar 27, 2023 09:09 AM GMT
Report

சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் கடைசியாக 2016-ம் ஆண்டு தாக்கலானது. அதன் பிறகு உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் நேரடி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை.

 மாநகராட்சி தேர்தல் நடத்தப்பட்டு, சென்னை மேயராக பிரியா தேர்வு செய்யப்பட்டா 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மேயர் பிரியா தாக்கல் செய்தார். இந்த நிலையில், தற்போது 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் :

சிங்கார சென்னை 2.0 திட்டம் மற்றும் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலை பணிகளை மேற்கொள்ள 881.20 கோடி ரூபாய் ஒதுக்கீடு

சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் உள்ள முக்கிய வணிக பகுதிகளில் On Street Parking திட்டத்தை செயல்படுத்த முடிவு

சென்னை 2.0 திட்டம் : சென்னை மாநகராட்சி பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்ன தெரியுமா ? | Chennai Corporation Budget Details

முதியவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வரி வசூல் செய்யும் முறை முன்பதிவு அடிப்படையில் மேற்கொள்ளப்படும்

சென்னை மாநகராட்சியில் வணிக வளாகம் மற்றும் சமுதாய நல கூடங்களை மேம்படுத்த ரூ.10 கோடி ஒதுக்கீடு

சென்னையில் மறுசுழற்சி செய்ய இயலாத கழிவுகளை விஞ்ஞான ரீதியான முறையில் எரிக்க 5 டன் திறன் கொண்ட எரியூட்டி ( incinerator) கட்டமைத்து, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்று செயலாக்கத்திற்கு கொண்டு வரப்படும்

சிந்தாரிப்பேட்டையில் 2.69 கோடி ரூபாய் செலவிலும் , பெசன்ட் நகரில் 80 லட்ச ரூபாய் செலவிலும் நவீன மீன் அங்காடி