கொரோனாவால் இறந்தவர்களின் உடலை எரிக்க நீண்ட வரிசை

Corona Death Cremation
By mohanelango May 12, 2021 02:12 PM GMT
Report

சென்னையில் கொரோனாவால் இறந்தவர்களின் உடலை எரிக்க வரிசையில் காத்திருக்கும் ஆம்புலன்ஸ்கள். ஒரு உடலை எரிக்க நீண்ட நேரம் காத்திருப்பதாக உறவினர்கள் புகார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனையில் போதிய படுக்கை மற்றும் ஆக்சிசன் இல்லாததால் மருத்துவமனை வாசலிலேயே சிகிச்சைக்காக ஏராளமானோர் ஆம்புலன்சில் காத்திருக்கும் காட்சிகளை தினந்தோறும் காண முடிகிறது.

மறுபக்கம் சிகிச்சை பலனின்றி இறந்து போனவர்களின் உடல்களை புதைப்பதற்கும் எரிப்பதற்கும் நீண்ட நேரம் காத்துக் கொண்டிருக்கும் நிலை ஏற்படுகிறது.

இந்த நிலையில் சென்னை அம்பத்தூர் மின்சார சுடுகாட்டில் கொரோனாவால் இறந்து போனவர்களின் உடல்களை எரிப்பதற்கும், புதைப்பதற்கும் வாகனத்தில் நீண்ட நேரம் உறவினர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனாவால் இறந்தவர்களின் உடலை எரிக்க நீண்ட வரிசை | Chennai Corona Corpses

இதனால் சுடுகாட்டின் முன் பகுதியில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நிற்பது காணமுடிகிறது ஒரு உடலை எரிப்பதற்கு சுமார் 2 மணி முதல் 3 மணி நேரம் ஆவதால் உடல் நிலை எரிப்பதற்கு நீண்ட நேரம் ஆகிறது.

இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள் சுடுகாட்டின் முன்பு நிற்கிறது. இந்த உடல்களை எரிக்க போதிய வசதிகள் செய்து தர வேண்டும் என்றும் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.