புதிய அபராதம் அமல்.. சென்னையில் மட்டும் இவ்வளவு வசூலா?
புதிய மோட்டார் வாகன சட்டம் நேற்று முதல் அமலான நிலையில் சென்னையில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதிமீறல் வழக்குகள் பதிவாகியுள்ளது.
மோட்டார் வாகன சட்டம்
மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின் படி போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் சில புதிய விதிமுறைகளும், புதிய அபராதகங்களும் கூட அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த அபராத முறை 28ம் தேதி அமலுக்கு வரும் என கூறப்பட்ட நிலையில் நேற்றே அமல்படுத்தப்பட்டது. தீபாவளி முடிந்து பலரும் சென்னை திரும்பி வரும் நிலையில் நேற்றே புதிய அபராதம் அமலானது வாகன ஓட்டிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
2,500 வழக்குகள் பதிவு
நேற்று ஒருநாளில் மட்டும் சென்னையில் வாகன விதிமீறல் தொடர்பாக 2,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விதிமீறல் தொடர்பாக விதிக்கப்பட்ட அபராதத்தில் சென்னை மாநகரில் மட்டும் ஒரு நாளில் ரூ.15 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.