சென்னை சேப்பாக்கத்தில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் உதயநிதி ஸ்டாலின்!

chennai stalin chepauk Udhayanidhi
By Jon Mar 15, 2021 03:44 PM GMT
Report

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் களம் இறக்கப்பட்டிருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் முதன்முறையாக அரசியலில் தேர்தல் களத்தில் குதித்துள்ளார். மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி போட்டியிட்டு வெற்றி மகுடம் சூட்டிய தொகுதியில், அவரது பேரனான உதயநிதி ஸ்டாலின் நிறுத்தப்பட்டுள்ளார்.

அரசியல் வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பை தற்போது ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்பாளராக களம் காணும் உதயநிதி ஸ்டாலினும் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.