'’எல்லாரும் ஆவி பிடிங்க ’’ சென்னை சென்ட்ரல் போலீசாரின் புதிய முயற்சி!

chennai centralpolice breatherelief
By Irumporai May 16, 2021 12:01 PM GMT
Report

தமிழகத்தில் கொரோனா வைரசினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில் ,சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய போலீசார், நீராவி பிடிப்பதற்கான ஏற்பாடுகளை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மேற்கொண்டுள்ளனர்.

அங்கு மொத்தமாக 10 ஆவி பிடிக்கும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறை மக்கள் பயன்படுத்திய பிறகும் அவை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது.

வேம்பு, துளசி, மஞ்சள், கற்பூரவள்ளி உள்ளிட்ட மூலிகைகள் கொண்டு ஆவி பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆவி பிடிப்பதால் சுவாசக் கோளாறுகள் நீங்கும் என இயற்கை மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில் காவல்துறையின் இந்த புதிய முயற்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.