இது ஜடேஜா ஸ்டைல் பாஸ் : ஜடேஜாவைப் போல பேட்டை சுற்றும் சாஹல் வைரலாகும் வீடியோ

Jadeja Chahal
By Irumporai Apr 15, 2022 03:17 AM GMT
Report

ராஜஸ்தான் அணியின் வீரர் சாஹல் சிஎஸ்கே அணியின் கேப்டன் ஜடேஜாவை போல பேட்டை சுழற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

15வது ஐ.பி.எல். போட்டித்தொடர் மும்பை மற்றும் புனேவில் நடைபெற்று வரும் நிலையில், புதிய அணிகள் வருகையுடன் நடப்பு ஐ.பி.எல். தொடர் நடைபெற்று வருவதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ராஜஸ்தான் அணியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் வலைப்பயிற்சியின்போது பேட்டிங் பயிற்சியில் ஈடுபடும் சாஹல் தனது நண்பரான ஜடேஜாவைப் போலவே பேட்டைச் சுழற்றிக்கொண்டே நடந்து வருகிறார்.

சாஹல் செய்வதைப் பார்த்த அந்த அணியின் தொடக்க வீரர் பட்லர் ஜடேஜா? தானே என்று சரியாக கூறுகிறார். சாஹல் பயிற்சிக்கு செல்வதற்கு முன்பு சஞ்சு சாம்சன், ஹெட்மயர் ஆகியோரிடம் ரகளை செய்து விட்டும் செல்கிறார். சாஹலின் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சாஹல் ராஜஸ்தான் அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக உள்ளார். ஜடேஜா சென்னை அணியின் கேப்டனாகவும், அந்த அணியின் முக்கிய ஆல்ரவுண்டராகவும் உள்ளார்.ஜடேஜாவும், சாஹலும் இந்திய அணிக்காக இணைந்து பல்வேறு போட்டிகளில் ஆடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.