சென்னையில் பேருந்து ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு - பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு
சென்னையில் பேருந்து ஓட்டும் போது ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், பேருந்து மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஓட்டுநருக்கு மாரடைப்பு
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது.
இந்த பேருந்து அரும்பாக்கம் 100 அடி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென பேருந்து ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, தாறுமாறாக ஓடி, சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மீது மோதியது.
ஒருவர் உயிரிழப்பு
இதில், 50 வயது மதிக்கத்தக்க நபர் பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த ஒருவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதில், 4 வாகனங்கள் சேதமடைந்துள்ளன. வாகனம் ஓட்டும்போதே மாரடைப்பு ஏற்பட்டதில், ஒட்டுநர் பேருந்திலே உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.