'' எதிர் நீச்சல் அடி வென்று ஏத்து கொடி '' - சென்னை சிறுவனின் அசத்தலான உலக சாதனை
சென்னையை சேர்ந்த சிறுவன் சைக்கிளை மிதித்தபடி வெறும் 14.32 நொடிகளில் ரூபிக் கியூப் கட்டங்களை வரிசைப்படுத்தி புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
ரூபிக் கியூப் கட்டைகளை சாதாரணமாக வரிசைப்படுத்துவது என்பதே நம்மில் பலருக்கும் சவாலான விஷயமாக இருக்கும். பல முறை முயற்சித்தும் சரி செய்ய முடியாமல் திணறியவர்களும் உண்டு.ஆனால் இன்றைக்கு பல சிறுவர்கள் ரூபிக் கியூப் கட்டைகளை வைத்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்கள்.
அந்தவகையில் சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் புதிய சாதனையை படைத்துள்ளஅந்த வீடியோ கின்னஸ் உலக சாதனையின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில் அந்த சிறுவன் சவாலை எப்படி பூர்த்தி செய்கிறார் என்பதும் பதிவாகியுள்ளது.
அந்த சிறுவனின் பெயர் ஜெயதர்ஷன் வெங்கடேசன் என தெரியவந்துள்ளது. அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ரூபிக் கியூப் கட்டங்களை விரைவாக வரிசை படுத்துவதற்கான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். தற்போது அவரது பயிற்சிக்கான பலனையும் அடைந்துள்ளார்.
15 நொடிகள் ஓடும் அந்த வீடியோவில் சைக்கிளில் வரும் சிறுவன் ஜெயதர்ஷன் வெங்கடேசன், ரூபிக் கியூபை ஒருவரிடமிருந்து பெறுகிறார். உடனடியாக அதனை வரிசைப்படுத்தும் பணியை மேற்கொள்கிறார் அவர்.
அதை 14.32 நொடிகளில் சேர்த்ததும் இரண்டு கைகளையும் மேல் உயர்த்தி பூரிப்பு கொள்கிறார்.
அவரது முயற்சியை இன்ஸ்டா பயனர்கள் பாராட்டி வருகின்றனர்.