சென்னையில் தொடங்குகிறது 45வது புத்தக கண்காட்சி - பபாசி அறிவிப்பு
சென்னையில் 45வது புத்தக கண்காட்சி ஜனவரி 6 முதல் 23ம் தேதி வரை நடைபெற உள்ளதாக பபாசி அறிவித்துள்ளது.
அனைத்து புகழ்பெற்ற நூலாசிரியர்கள் மற்றும் பதிப்பாளர்கள், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடும் இலக்கியம், கலை, அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், வரலாறு, பொது அறிவு, உணவு, விளையாட்டு, உடல்நலம் போன்ற பல புத்தகங்கள் இங்கு கிடைக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சென்னை புத்தக கண்காட்சிக்கு வந்து பயனடைகின்றனர்.
அந்த வகையில் சென்னையில் 45வது புத்தக கண்காட்சி ஜனவரி 6 முதல் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுகுறித்து பபாசி நிர்வாகிகள் செய்தியாளர்களிடையே பேசுகையில்,
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 2022 புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும், வேலை நாட்களில் மதியம் 3 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் கண்காட்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.