சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை; இனி 2 மணி நேரம்தான் - NHAI தகவல்!

Chennai Bengaluru
By Sumathi Jan 29, 2024 10:33 AM GMT
Report

சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ் வே குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை-பெங்களூரு

சென்னை பெங்களூரை இணைக்கும் எக்ஸ்பிரஸ் வே சாலை பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த வருட இறுதியில் இந்த சாலைகள் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட உள்ளன.

குடிபாலா முதல் பெத்தமங்கலா

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் இருந்து பெங்களூருவின் புறநகர் பகுதியான ஓஸ்கோடே வரை எக்ஸ்பிரஸ்வே செல்கிறது. எக்ஸ்பிரஸ்வே திட்டம் பயன்பாட்டிற்கு வந்தால் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கலாம்.

இதன்மூலம் சென்னை - பெங்களூரு பயணத்தை வெறும் 2 மணி நேரத்தில் முடித்து விடலாம். பெரிய அளவில் பயண நேரம் மிச்சமாகும். இந்த திட்டத்திற்காக 17,930 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வேலைகளை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மேற்கொண்டு வருகிறது.

இனி சென்னை - பெங்களூரு - மைசூர்; வெறும் 2 மணி நேரம்தான் - அதிவேக புல்லட் ரயில் திட்டம்

இனி சென்னை - பெங்களூரு - மைசூர்; வெறும் 2 மணி நேரம்தான் - அதிவேக புல்லட் ரயில் திட்டம்

NHAI  தகவல்

இந்நிலையில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஆண்டுக்கான வேலைத் திட்டத்தில் இந்த திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. ₹3,500 கோடி மதிப்பில் இந்த உயர்மட்ட சாலை அமைக்கப்பட உள்ளது. அதாவது 23.2 கிமீ நீளமுள்ள மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் இடையே ஒரே நீளமாக பாலம் அமைக்கப்படும்.

chennai-bangalore-express-way

இந்த பகுதியை இப்போது கடக்க 30 நிமிடம் குறைந்தபட்சம் ஆகிறது. பாலம் கட்டப்பட்டால் 10 -15 நிமிடத்தில் இந்த பகுதியை கடக்கலாம். இடை இடையே மக்கள் வெளியேற, உள்ளே வர இணைப்பு பாலங்கள் அமைக்கப்படும். 6 வழி சாலை கொண்ட மிக பிரம்மாண்ட பாலம் ஆகும். இதற்கான முழு ரிப்போர்ட் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளது.