தீ விபத்தில் சிக்கிய 36 பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றிய செவிலியருக்கு முதல்வர் பாராட்டு..!

cm nurse wish 36 babies recue
By Anupriyamkumaresan Jun 05, 2021 08:12 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

சென்னை திருவல்லிக்கேணி மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் பிஞ்சு குழந்தைகளை காப்பாற்றிய செவிலியருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணியில் கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு பிரசவத்திற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பொதுமக்கள் வருவது வழக்கம்.

தீ விபத்தில் சிக்கிய 36 பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றிய செவிலியருக்கு முதல்வர் பாராட்டு..! | Chennai Babies Hospital Fire Cm Wish Nurse

இந்த சூழலில் கடந்த மே 26 ஆம் தேதி இரவு 8.30 மணி அளவில் குழந்தைகள் சிகிச்சை பெற்று வரும் இரண்டாம் தளத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ஏசியில் ஏற்பட்ட மின் கசிவால் ஏற்பட்ட இந்த தீ விபத்து மளமளவென பரவியது.

இதனால் செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், அங்கிருந்த குழந்தைகளை மாற்று அறைக்கு அவசர அவசரமாக மாற்றி அவர்களின் உயிரை காப்பாற்றினர்.

இதனால் குழந்தைகள் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்தனர்.இந்த விபத்தில் இருந்து சுமார் 36 பச்சிளம் குழந்தைகள் மீட்கப்பட்டது.

குறிப்பாக இந்த விபத்தின்போது தீயணைப்பு வீரர்கள் வரும் முன்னரே செவிலியர் ஜெயக்குமார் என்பவர் அங்கு இருந்த கண்ணாடிகளை உடைத்து குழந்தைகள் மற்றும் தாய்மார்களை துணிச்சலாக போராடி காப்பாற்றினார்.

தீ விபத்தில் சிக்கிய 36 பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றிய செவிலியருக்கு முதல்வர் பாராட்டு..! | Chennai Babies Hospital Fire Cm Wish Nurse

இந்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியடைய செய்தது. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செவிலியர் ஜெயக்குமார் மற்றும் அவரின் குடும்பத்தினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ள்ளார். அத்துடன் அவருக்கு பரிசாக சில புத்தகங்களையும் வழங்கியுள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “36 பச்சிளங்குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்த சென்னை கஸ்தூரிபாய் மருத்துவமனை தீ விபத்தின் போது, தீயணைப்பு வீரர்கள் வரும் முன்பே கண்ணாடிகளை உடைத்து குழந்தைகள் – தாய்மார்களின் உயிர்களைக் காத்த துணிச்சலான செவிலியர் திரு. ஜெயக்குமாரை நேரில் அழைத்துப் பாராட்டினேன்!உயிர் காப்பதே அறம்!” என்று பதிவிட்டுள்ளார்.