"என் முடிவு என்னுடையது"....கடிதம் எழுதி உயிரை மாய்த்து கொண்ட மருத்துவரின் திடுக்கிடும் பின்னணி
மூன்று முறை கொரோனா தொற்றால் இதய பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர் ஊசி போட்டு தற்கொலை கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உதவி பேராசிரியர்
சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் வசித்து வந்தவர் டாக்டர் கார்த்திக். 42 வயதாகும் இவர் திருமணம் செய்து கொள்ளாமல், சென்னை மருத்துவக்கல்லூரியில் இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சை பிரிவின் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார்.
கார்த்தி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா சமயத்தில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது, அவருக்கு 3 முறை கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ராஜீவ் காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் பணிக்கு வந்தார்.அதே நேரத்தில் அவரது தங்கை தீபா அவருக்கு தினமும் அவரிடம் தொலைபேசி வாயிலாக பேசி வந்துள்ளார்.
அதே போல கடந்த 19- ஆம் தேதியும் தீபா போன் செய்த போது, அவர் போனை எடுக்காமல் இருந்துள்ளார். இதன் காரணமாக தீபா கார்த்திக்கின் நண்பரான டாக்டர் ஸ்ரீவித்யா என்பவரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.அதனை தொடர்ந்து ஸ்ரீவித்யா கார்த்திக் வீட்டிற்குச் சென்ற போது, அவரது உடல் அழுகிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த தீபா தேனாம்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.
தற்கொலை
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் உயிரை மாய்த்து கொள்வதற்கு முன்பு கார்த்திக் எழுதியிருந்த கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர்.
அதில், "எனது முடிவு என்னுடையது" என்று எழுதப்பட்டிருந்தது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மூன்று முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்ட கார்த்திக் அதற்காக தடுப்பு ஊசிகளை போட்டுகொண்டுள்ளார். அதன் காரணமாக அவருக்கு இதய பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
அதனால், குடிப்பழக்கத்தை கைவிட்ட கார்த்திக், 2 மாதங்களாக மீண்டும் குடிக்க ஆரம்பித்ததன் காரணமாக அவருக்கு உடல் நிலை மோசமாகியுள்ளது. மன உளைச்சல் அடைந்த கார்த்திக் ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.