குடும்பத்தினருடன் சாலையில் ஓவியம் வரைந்து கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய ஓவியர்..! யார் இவர்..?
சென்னையில் ஓவியர் ஒருவர், தனது குடும்பத்துடன் சாலையில் ஓவியம் வரைந்து பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
சென்னை திருவொற்றியூரில் 30 வருடங்களாக ஓவியத் தொழிலில் ஈடுபட்டு வரும் ஜெயபிரகாஷ் என்ற ஓவியர், முகக் கவசம், கை கழுவுதல், சமூக இடைவெளி, உள்ளிட்ட செயல்களை ஓவியமாக வரைந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அந்த வகையில் திருவொற்றியூர் காவல் நிலையம் வெளியே, ஓவியர் ஜெயபிரகாஷ், அவரது குடும்ப உறுப்பினர்களோடு இணைந்து கொரோனா தொற்றால் ஏற்பட்டு வரும் தற்போதைய சூழலை தத்ரூபமாக வரைந்து அசத்தியுள்ளார்.
இதுபோன்ற செயல்களால் சாலையில் வரும் மக்கள் இந்த ஓவியத்தை கண்டு விழிப்புணர்வுடன் செயல்படுங்கள் என தனது சொந்த செலவில் ஓவியத்தை வரைந்து அசத்தியுள்ளார் ஓவியர் ஜெயபிரகாஷ்.