அப்பார்ட்மெண்டில் அட்டூழியம் - பேச்சுலர்ஸ்க்காக களத்தில் குதித்த நடிகை சகிலா!
நடிகை சகிலா தானாக முன்வந்து போராட்டத்திற்கு ஆதரவளித்த சம்பவம் வைரலாகி வருகிறது.
தண்ணீர் வசதி
சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் முறையாக பராமரிப்பு தொகை கட்டவில்லை எனக் கூறி 40க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு தண்ணீர் வசதி கடந்த சில நாட்களுக்கு முன்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விளக்கம் கேட்ட நிலையில் நிர்வாகம் முறையாக பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், 20க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சகிலா ஆதரவு
மேலும், மற்றவர்களிடம் பராமரிப்புத் தொகையாக 2,500 ரூபாயும், பேச்சிலர்களிடம் மட்டும் 9 ஆயிரம் ரூபாயும் வாங்குவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதில் பெண்களும் பாதிக்கப்பட்ட நிலையில், இதற்கு எவ்வித தொடர்பும் இல்லாத போதிலும் நடிகை சகிலா தானாக முன்வந்து போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளார்.