தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து 9000 சிறப்பு பஸ்கள் நாளை முதல் இயக்கம்
தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் அவர்களுடைய சொந்த ஊருக்கு தீபாவளி பண்டிகையை ஒட்டி கிளம்ப தொடங்கி இருக்கிறார்கள். அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை வருகிறது என்றாலும் திங்கட்கிழமையும் அரசு விடுமுறையும் வழங்கப்பட்டிருக்கிறது.
இதனால் சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்களும் தொடர் விடுமுறை என்பதால் சொந்த ஊர்களுக்கு செல்லக்கூடிய நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இப்படியாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு தொழில் மற்றும் வேலை வாய்ப்பு காரணமாக தங்கி இருப்பவர்கள் அவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக முன்பதிவு மிகவும் வேகமாக நடந்து வருகிறது.
அதே போல், சிறப்பு ரயில்கள் உள்ளிட்ட எல்லா ரயில்களும் நிரம்பி விட்டதால் அரசு பஸ்களை நம்பி உள்ள ஏழை நடுத்தர மக்கள் நெரிசல் இல்லாமல் அவர்கள் சொந்த ஊருக்கு பயணம் செல்வதற்காக சிறப்பு பஸ்கள் நாளை முதல் இயக்கப்படுகிறது.
சென்னை,. கோயம்பேடு, மாதாவரம், மறைமலைநகர், கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையம், சிஎம் ஏடிஏ, கால்நடை பூங்கா ஆகிய ஐந்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட இருக்கிறது.

நாளை நவம்பர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை மூன்று நாட்களும் சென்னையிலிருந்து வழக்கமாக வெளியூர்களுக்கு செல்லக்கூடிய 6573 பஸ்களுடன் கூடுதலாக 9086 பஸ்கள் என மொத்தம் 15 ஆயிரத்து 659 பஸ்கள் இயக்கப்பட இருக்கிறது.
அதோடு, தீபாவளி சிறப்பு பஸ்களில் பயணம் செய்ய சுமார் ஒரு லட்சம் பேருக்கு மேல் முன்பதிவு செய்து இருக்கிறார்கள். சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து புறப்பட்டு செல்லக்கூடிய சிறப்பு பஸ்கள் போக்குவரத்து நெரிசல் சிக்காமல் செல்ல விரிவான ஏற்பாடுகளையும் போக்குவரத்து கழக அதிகாரிகள் செய்து வருகின்றனர்.