திறந்தவெளி மிருகக்காட்சி சாலையா சென்னை? சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்!
சென்னை என்ன திறந்தவெளி மிருகக்காட்சியா? என சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் கால்நடைகள் சர்வ சாதாரணமாக நடந்து சென்று கொண்டிருக்கின்றன என்பதும் இதனால் வாகன விபத்துகள் அதிகரித்து வருகிறது என்பதும் தெரிந்ததே.
இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்ய வழக்கு விசாரணைக்கு வந்த போது ’கால்நடைகள் சுற்றித்திரிய சென்னை மாநகரம் என்ன திறந்தவெளி மிருகக்காட்சிசாலையா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
சென்னையில் தெருநாய்கள் மற்றும் என்று கால்நடைகளும் சாலைகளில் சுற்றித் திரிகின்றன என்றும் போக்குவரத்து மிகுந்த கடற்கரை சாலையிலும் கால்நடைகள் கடந்து போவதை பார்க்க முடிகிறது என்றும் நீதிபதி கூறினார்.
சென்னை மாநகராட்சிக்கு வெளியில்தான் கால்நடைகள் இருக்க வேண்டும் என்றும் நகருக்குள் இருப்பதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். கால்நடைகள் சுற்றி திரிவதை தடுக்க விதிகள் இல்லை எனில் நீதிமன்றமேஉத்தரவை பிறப்பிக்கும் என்றும் நீதிபதி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.