சென்னையில் பயங்கரம் : சாலையில் பைனான்சியர் ஓட ஓட வெட்டிக் கொலை - குற்றவாளிகள் இருவர் சரண்!
சென்னை அமைந்தக்கரையில் பைனான்சியர் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு குற்றவாளிகள் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.
சென்னை அமைந்தகரையில் பட்டப்பகலில் பைனான்சியர் ஆறுமுகம் என்பவரை மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக சென்னை அமைந்தகரை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் குற்றவாளிகளான சந்திரசேகர் மற்றும் ரோஹித் ராஜ் இருவரும் கள்ளக்குறிச்சி குற்றவியல் விரைவு நீதிமன்ற நீதிபதி கண்ணன் முன்னிலையில் சரணடைந்தனர்.
இந்த நிலையில் கொலை வழக்கு குற்றவாளிகளான ரோஹித் ராஜ் மற்றும் சந்திரசேகர் ஆகிய இருவரையும் நீதிபதி கண்ணன் கடலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.