சென்னை விமான நிலையத்தில் இலங்கையர் ஒருவர் கைது
சென்னை விமான நிலையத்தில் குற்றப்பின்னணி உடைய இலங்கையை சேர்ந்த நபரை க்யூ போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையிலிருந்து நேற்று முன்தினம் இரவு 9:15 மணிக்கு டெல்லி செல்லும், 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானம் புறப்படத் தயாரான போது கியூ பிராஞ்ச் போலீசார் வந்து கண்காணித்தனர்.
அதில், ஆதிமூலம் மணி(வயது 45) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் குற்றப்பின்னணி உடையவர் என்பது தெரியவந்தது. மேலும் இலங்கையை சேர்ந்த ஆதிமூலம், 15 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டவிரோதமாக தங்கியிருந்தவர் என்பதும் தெரியவந்தது.
இவருடன் ஒன்றாக இருந்த குணசேகர் என்பவர் ஏற்கனவே டெல்லி சென்று விட்டதால் அவரையும் கைது செய்த போலீசார் முயற்சித்து வருகின்றனர். இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்த க்யூ போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.