பரிசு பார்சலில் போதை மாத்திரைகள்..அதிர்ந்து போன அதிகாரிகள்!

Chennai Airport Seized Drungs Tablet
By Thahir Jul 23, 2021 01:00 PM GMT
Report

ஜொ்மனியிலிருந்து பரிசு பொருள் என்ற பெயரில் சென்னைக்கு சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள 100 போதை மாத்திரைகளை சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

பரிசு பார்சலில் போதை மாத்திரைகள்..அதிர்ந்து போன அதிகாரிகள்! | Chennai Airport Seized Drugs Tablet

ஜொ்மனி நாட்டிலிருந்து சென்னை பழைய விமானநிலையத்திற்கு வெளிநாட்டு சரக்கு விமானம் ஒன்று நேற்று இரவு வந்தது.அதில் வந்த பாா்சல்களை சென்னை விமானநிலைய சுங்கத்துறையினா் பரிசோதனை செய்தனா்.அப்போது ஜொ்மனியிலிருந்து சென்னையில் உள்ள ஒரு முகவரிக்கு வந்த பாா்சல் ஒன்றில் பரிசு பொருள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

சுங்கத்துறையினருக்கு அந்த பாா்சல் மீது சந்தேகம் ஏற்பட்டது.இதையடுத்து அந்த பாா்சலில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணை தொடா்பு கொண்டனா்.அது முழுவதுமாக அடித்து ஓய்ந்தது.போனை எடுக்கவில்லை.அதன்பின்பு சென்னை முவரிக்கு சென்று விசாரித்தனா்.வீடு பூட்டியிருந்தது.அங்கு இளைஞா்கள் சிலா் தங்கியிருப்பதாக தெரியவந்தது.

இதையடுத்து சுங்கத்துறையினா் இன்று காலை அந்த பாா்சலை பிரித்து பாா்த்து ஆய்வு செய்தனா்.அந்த பாா்சலுக்குள் 100 போதை மாத்திரைகள் இருந்ததை கண்டுப்பிடித்தனா்.அவைகள் மிகவும் விலை உயா்ந்தவை.செல்வந்தா்கள் முக்கியமான பாா்ட்டிகளில் பயன்படுத்துபவைகள்.அந்த 100 போதை மாத்திரைகளின் மதிப்பு ரூபாய் 5 லட்சம்.

பரிசு பார்சலில் போதை மாத்திரைகள்..அதிர்ந்து போன அதிகாரிகள்! | Chennai Airport Seized Drugs Tablet

இதையடுத்து ரூபாய் 5 லட்சம் மதிப்புடைய போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த சுங்கத்துறையினா்,வழக்குப்பதிவு செய்து,இந்த போதை மாத்திரைகளை பரிசு பொருள் என்ற பெயரில் ஜொ்மனியிலிருந்து வரவழைத்த இளைஞா்களை தேடி வருகின்றனா்.