சென்னை விமான டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு - ஷாக்கான பயணிகள்...!
சென்னை விமான டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்ததால், பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை
நாடு முழுவதும் வரும் 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து, கடைகளில் பட்டாசு விற்பனையும், புத்தாடை விற்பனையும் சூடு பிடித்துள்ளது.
துணி கடைகளில் மக்கள் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் பட்டாசு வெடிக்க, விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான டிக்கெட் கட்டணம் உயர்வு
இந்நிலையில், தீபாவளியையொட்டி பயணிகள் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல, விமானத்தை பயன்படுத்துவதால், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக பயணிகள் டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.