சென்னை விமான நிலையத்தில் திடீரென மயக்கமடைந்த பயணி - CPR செய்து உயிரை காப்பாற்றி பாதுகாப்புப் படை வீரர்

Chennai
By Nandhini Sep 26, 2022 08:20 AM GMT
Report

சென்னை விமான நிலையத்தில் திடீரென மயக்கமடைந்த பயணிக்கு தக்க நேரத்தில் CPR செய்து மத்திய பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரை காப்பாற்றியுள்ளார்.

வைரலாகும் வீடியோ

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சென்னை விமான நிலையத்தில் 69 வயது பயணி ஒருவர் திடீரென மயக்கம் அடைந்தார்.

அப்போது, அங்கிருந்த மத்திய பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் மயக்கமடைந்த பயணிக்கு உரிய நேரத்தில் CPR செய்து உயிரை காப்பாற்றினார். உயிரை காப்பாற்றிய மத்திய பாதுகாப்புப் படை வீரருக்கு அப்பயணி மனதார நன்றி தெரிவித்தார். தற்போது அப்பயணி நலமுடன் உள்ளார்.

இது குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலர் உயிரை காப்பாற்றிய மத்திய பாதுகாப்புப் படை வீரருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.  

chennai-airport-cpr-saves-lives-security-guard