நிலைதடுமாறி பேருந்தின் டயரில் சிக்கிய வாலிபர் - தலை நசுங்கி பலி: பதைபதைக்கும் காட்சி

death chennai accident
By Anupriyamkumaresan Nov 01, 2021 12:56 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in விபத்து
Report

சென்னை சைதாப்பேட்டை சின்னமலை பகுதியில், சாலையில் இருந்த பள்ளத்தால் நிலைத்தடுமாறிய இருசக்கர வாகன ஓட்டி அரசு மாநகர பேருந்தில் சிக்கி பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.

சென்னை பெசன்ட் நகரில் இருந்து வடபழனி நோக்கி செல்லும் மாநகர பேருந்து சின்னமலை வழியாக சென்றுள்ளது. அப்போது அதே வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ஒருவர், சாலையில் இருந்த பள்ளத்தில் நிலைத்தடுமாறி சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் சிக்கினார்.

தலையில் பேருந்தின் பின் சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இளைஞரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர்.

நிலைதடுமாறி பேருந்தின் டயரில் சிக்கிய வாலிபர்  - தலை நசுங்கி பலி: பதைபதைக்கும் காட்சி | Chennai Accident Bus Death Saidapet

அதில் மழைக்காரணமாக பைக்கில் வேகமாக வந்த அந்த நபர் சாலையில் இருந்த பள்ளத்தில் நிலைத்தடுமாறி பேருந்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது சிசிடிவியில் பதிவாகி இருந்தது.

காவல்துறை முதற்கட்ட விசாரணையில் நங்கநல்லூர் சேர்ந்த முகமது யூனுஸ் என்பவர் தான் விபத்தில் பலியானது தெரியவந்தது. இவர் தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

வேலைக்கு சென்று கொண்டிருந்த முகமது யூனுஸ் மாநகர பேருந்து இடையே சிக்கி பலியானது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. விபத்து தொடர்பாக அரசு மாநகர பேருந்து ஓட்டுனர் தேவராஜை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.