விளையாட சென்ற 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு! என்ன நடந்தது?
சென்னையில் விளையாடிகொண்டிருந்த 4 வயது சிறுவன் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை குரோம்பேட்டை அம்பேத்கர் நகர் வ.உ.சி. தெருவை சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் சரஸ்வதி என்ற தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
இவர்களது இளைய மகன் சர்வேஷ் நேற்று காலையில் வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தான். சிறுது நேரத்தில் அவர்களது விளையாட்டு சத்தம் நின்றதை உணர்ந்த சரஸ்வதி பதறியடித்து சென்று வெளியில் பார்த்துள்ளார்.
அப்போது சர்வேஷ் அங்கில்லை என்பதை உணர்ந்து மகனை காணவில்லை என கூச்சலிட்டார். வீட்டில் உள்ள அனைவரும் அக்கம் பக்கம் என எல்லா திசைகளிலும் தேடியதில், வீட்டின் பின்புறம் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி கிடந்துள்ளான்.
இதனை கண்டு அதிர்ச்சியைடைந்த பெற்றோர், சிறுவனை தூக்கி கொண்டு அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அப்போது சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சர்வேஷ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.