பிரிட்ஜ் வெடித்து 3 பேர் பரிதாப பலி : சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
Crime
By Irumporai
ஊரப்பாக்கத்தில் பிரிட்ஜ் வெடித்தன் காரணமாக மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடுத்த ஊரப்பாக்கத்தில் கோதண்டராமன் நகரில் கிரிஜா எனபவர் வீடில் பிரிட்ஜ் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் அந்த வீட்டில் இருந்த கிரிஜா( 63) அவரின் தங்கை ராதா(55), ராஜ்குமார்( 48) ஆகிய மூன்று பேரும் மூச்சு திணறி இறந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரிட் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 நபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.