சென்னையில், கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறியதாக ஒரே நாளில் ரூ.2.18 லட்சம் வசூல்
சென்னையில் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறிய பொதுமக்களிடம் நேற்று ஒருநாளில் மட்டும் ரூ.2.18 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிவேகமாக கூடி வருகிறது. கடந்த மாத தொடக்கத்தில் பாதிப்பு 700-க்குள் இருந்த நிலையில் தற்போது 1700-ஐ கடந்து விட்டது.
ஒமைக்ரான் வைரஸ் வந்த பிறகு தமிழகத்தில் பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்துள்ள நிலையில் இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், சென்னையில் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறிய பொதுமக்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது.
அதன்படி, கடந்த 31ம் தேதி முதல் நேற்று வரை மொத்தம் 2,603 பேரிடமிடருந்து ரூ.5.45 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், நேற்று ஒருநாளில் மட்டும் ரூ.2.18 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.