முதியவருடன் உல்லாசம்.. அதிகாலையில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

Chennai Relationship Murder
By Vidhya Senthil Nov 26, 2024 11:16 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

  தனியார் விடுதியில் இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  தனியார் விடுதி

சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் ஜோதி(வயது 50). இவருக்கும் வில்லிவாக்கத்தை சேர்ந்த ரம்யா என்பவர் அறிமுகமாகியுள்ளார். நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

A young woman who was alone with an old man died

இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன் ரம்யாவும், ஜோதியும் வேளச்சேரியில் உள்ள பிரபல தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். ரம்யாவுக்கு மதுக் குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் விடுதிக்கு வரும்போதே 6 பீர் பாட்டில்கள் வாங்கி வந்துள்ளனர்.

டீயுடன் பிஸ்கெட் சாப்பிட்ட குழந்தை உயிரிழப்பு - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

டீயுடன் பிஸ்கெட் சாப்பிட்ட குழந்தை உயிரிழப்பு - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இரவில் மது அருந்திவிட்டு இருவரும் தனிமையிலிருந்துள்ளனர். அப்போது திடீரென நள்ளிரவில் எழுந்த ரம்யா தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார்.இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஜோதி ஓட்டல் ஊழியர்களின் உதவியுடன் முதியவர் ஜோதி ஆம்புலன்ஸ் மூலம் ரம்யாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இளம்பெண்

அங்கு ரம்யாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.இந்த சம்பவம் குறித்து வேளச்சேரி காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

A young woman who was alone with an old man died

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் ரம்யா உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மர்ம மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.