இப்படியுமா நடக்கும்? - நள்ளிரவில் வேலை முடிந்து தனியாக செல்லும் பெண்களுக்கு தொடர்ந்து நேரும் கொடுமை
சென்னையில் நள்ளிரவில் வேலை முடிந்து தனியாக செல்லும் இளம் பெண்களை குறிவைத்து தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்து வந்த ஹோட்டல் ஊழியர் ஒருவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
சென்னை அண்ணாநகர் பகுதியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர் தனது 2 மகள்களுடன் கடந்த 10ஆம் தேதி உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அதே இடத்தில் தான் முன்னாள் ராணுவ வீரரின் 22 வயதுடைய மகள் ஒருவரும் நடைபயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர், தனியாக நடைபயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனை கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்த போது அந்த மர்மநபர் மின்னல் வேகத்தில் தப்பி சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்த பெண், தனது தந்தையுடன் சென்று போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகள் கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அவர் தொடர்ச்சியாக தனியாக செல்லும் பெண்களிடம் இந்த வேலைகளில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் தனிப்படை அமைத்து அந்த மர்ம நபரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில் அவர் வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த 19 வயது தினேஷ் குமார் என்பது தெரியவந்தது.