செங்கம் அருகே ரேஷன் கடையில் பொருட்கள் இல்லை என கூறியதால் பொதுமக்கள் வாக்குவாதம்..!
செங்கம் அருகே நியாவிலை கடையில் அரிசி இல்லை என கூறியதால் விற்பனையாளருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த முன்னூர் மங்கலம் பகுதியில் இயங்கி வரும் நியாய விலை கடையில் மணி என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த கடையில் சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக ரேஷன் பொருட்கள் முறையாக பொதுமக்களுக்கு வழங்கப்படுவதில்லை என கூறப்படுகிறது.
தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கால் பொதுமக்கள் ரேஷன் பொருட்களையே நம்பியுள்ளனர். இந்த நிலையில், 1000 நபர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பொருட்களை 500 நபர்களுக்கு மட்டும் வழங்கிவிட்டு மற்றாவர்களை இல்லை என திருப்பி அனுப்பி வைத்து விடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், விற்பனையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.