கணவன், மனைவி கட்டிப்போட்டு கழுத்தறுத்து கொடூர கொலை - என்ன நடந்தது?

murder chengalpet
By Anupriyamkumaresan Jul 18, 2021 08:47 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

செங்கல்பட்டு அருகே வீட்டில் இருந்த கணவன், மனைவியை கட்டிப்போட்டு கழுத்தறுத்து கொலை செய்த மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த ஆலப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சாம்சன் தினகரன், குடிநீர் வடிகால் வாரியத்தில் டைம் கீப்பராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

கணவன், மனைவி கட்டிப்போட்டு கழுத்தறுத்து கொடூர கொலை - என்ன நடந்தது? | Chengalpet Murder Husband And Wife

இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவி ஆலிஸ் அவரது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். சாம்சன் தினகரன் இவரது இரண்டாவது மனைவி ஜெனட் என்பவருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், அப்பகுதியில் நேற்று முன் தினம் இரவு கனமழை பெய்துள்ளது.

அப்போது அவரது தந்தையிடன் பேசுவதற்காக முதல் மனைவியின் மகள் பென்னிட்டா போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர்கள் வெகுநேரமாக தொடர்பு கொண்டும் போனை எடுக்காததால் முதல் மனைவி, மகன் மற்றும் மகள், அவரது வீட்டிற்கு விரைந்துள்ளனர்.

அப்போது அவர்கள் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இரண்டு வீடுகளிலும் உள்ள ஒவ்வொரு அறைகளிலும் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஒரு அறையின் கதவை உடைத்து சென்று உள்ளேஎ பார்த்ததில், ரத்தம் சிதறியதை தண்ணீர் ஊற்றி கழுவி இருந்ததையும், துர்நாற்றம் வீசாமல் இருக்க மஞ்சள் தூளை கொட்டி கழுவிட்டு டப்பாவை கொலையாளிகள் அங்கேயே வீசப்பட்டிருப்பதை கண்டும் திடுக்கிட்டனர்.

கணவன், மனைவி கட்டிப்போட்டு கழுத்தறுத்து கொடூர கொலை - என்ன நடந்தது? | Chengalpet Murder Husband And Wife

இதில் சந்தேகமடைந்த போலீசார், தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்தனர். அதில் கணவன் கழுத்தறுக்கப்பட்ட நிலையிலும், மனைவி கயிற்றால் கட்டப்பட்ட நிலையிலும் சடலமாக கிடந்துள்ளனர். இதனை தொடர்ந்து சடலங்களை மீட்ட போலீசார், சிசிடிவி காட்சிகள் மூலம் மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.