ரூ.1 கோடி நிவாரணம் - பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு
வெடி விபத்தில் உயரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வெடி விபத்து
தெலங்கானா, சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள சிகாச்சி ரசாயன தொழிற்சாலையில் திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து 33 பேர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், பலர் காணாமல் போயுள்ளனர். இந்நிலையில், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இறந்தவர்களின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.
ரூ.1 கோடி நிவாரணம்
இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்குவதாக சிகாச்சி தொழிற்சாலை செயலாளர் விவேக் தெரிவித்துள்ளார். இந்த விபத்து ரியாக்டர் வெடித்ததால் இல்லை. நாசவேலை கூட காரணமாக இருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து விபத்து குறித்து தலைமை ரசாயன நிபுணர் பிரதாப் குமார் தலைமையில் ஓய்வு பெற்ற ரசாயன நிபுணர் சூர்ய நாராயணா, பூனாவை சேர்ந்த பாதுகாப்பு அதிகாரி சந்தோஷ் கோகே ஆகிய 3 பேர் விசாரணைக்காக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், சிகாச்சி ரசாயன நிறுவனம் 3 மாதம் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.