பாலியல் வன்கொடுமை செய்பவர்களை ஆண்மையற்றவர்களாக மாற்றும் புதிய சட்ட மசோதா அறிமுகம்
சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கும் நபர்களை ஆண்மையற்றவர்களாக மாற்றும் புதிய சட்ட மசோதா அறிமுகம் செய்யப்படவுள்ளது.
தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு 3 வயது பெண் குழந்தை 48 வயதுடைய நபரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சர்ஜரி செய்யும் அளவிற்கு பாதிப்புக்குள்ளானது. இந்நிலையில் குற்ரம் சாட்டப்பட்ட நபரை கைது செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, மக்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து பாலியல் குற்றங்களுக்கு தண்டனையை அதிகரிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ள அந்நாடு முடிவு செய்துள்ளது.
அதன்படி, 14 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளிடம் பாலியல் வன்புணர்வு குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, சிறை தண்டனை வழங்கப்படுவதோடு, தண்டனை முடிவில் ரசாயன முறையில் அவர்களை ஆண்மையற்றவர்களாக ஆக்கவும் முடிவு செய்து சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது.
எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் இந்த மசோதா சட்டமாக்கப்படும் என கூறப்படுகிறது.