செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 2,000 கனஅடி நீர் திறப்பு - மழை குறைந்ததால் வரத்து குறைவு

Chennai heavyrain Chembarambakkam Lake
By Anupriyamkumaresan Nov 10, 2021 04:22 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருவதால் நீர் இருப்பு வேகமாகக் குறைந்து வருகிறது. வடகிழக்கு பருவமழையால் செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வந்த நிலையில் நேற்று முதல் மழை நின்றதால் ஏரிக்கு நீர் வரத்து குறைந்தது.

இன்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 300 கனஅடி வீதமே தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நீர்வரத்து குறைந்தபோதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இதனால் கடந்த 7ஆம் தேதி 3 ஆயிரம் மில்லியன் கனஅடியாக இருந்த நீர் இருப்பு தற்போது 2 ஆயிரத்து 786 மில்லியன் அடியாக குறைந்துவிட்டது.

இன்னும் இரு நாட்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுவதாக பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.