தொடர் கனமழை: செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்வு

By Fathima Oct 06, 2021 03:55 AM GMT
Report

தொடர்ந்து மழைபெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய நீர் நிலைகளில் மிக பெரியது செம்பரம்பாக்கம் ஏரி.

24 அடிகொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு, தொடர் கனமழை காரணமாக 21.15 அடியாக அதிகரித்துள்ளது.

நீர்வரத்து 715 கனஅடியாக இருக்கும் நிலையில், ஒரேநாளில் 50 மில்லியன் கனஅடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

தொடர்ந்து சென்னையில் கனமழை பெய்யும் பட்சத்தில் செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிட நேரிட்டால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.