கனமழை எதிரொலி... - செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 1000 கனஅடி நீர் திறப்பு..- மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Tamil nadu Chennai
By Nandhini Nov 12, 2022 12:21 PM GMT
Report

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை ஏரிகள் வேகமாக நிரம்பி வருவதால், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டது.

1000 கனஅடி நீர் திறப்பு

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் நிரம்பி வருகின்றன.

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீர் முதலில் தூர்வாரப்பட்டு கால்வாய் முழுவதும் தயார் நிலையில் வைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் 24 அடியாக இருந்த செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தற்போது 21 அடியாக உயர்ந்துள்ளது.

முன்னெச்சரிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில், இன்று மதியம் முதல் 1000 கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் உபரி நீர் அதிகளவில் வெளியேற வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏரியின் நீட் மட்டத்தை 21 அடியாக கண்காணிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து, செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

chembarambakkam-increased-to-1000-cubic-feet