?LIVE மாண்டஸ் புயல் எதிரொலி : இன்று இரவு அரசு பேருந்துகள் இயங்காது - தமிழக அரசு
Governor of Tamil Nadu
Chennai
By Irumporai
மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று இரவு அரசு பேருந்து இயங்காது தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
வங்க கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் நாளை நள்ளிரவு கரையை கடக்க உள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை மேலும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுள்ளது. இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று இரவு அரசு பேருந்து இயங்காது தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.