சசிகலா சிறையிலிருந்து அல்ல மருத்துவமனையில் இருந்து நேராக சென்னை செல்கிறாரா?

india house political
By Kanagasooriyam Jan 22, 2021 11:40 AM GMT
Kanagasooriyam

Kanagasooriyam

in இந்தியா
Report

சசிகலா விடுதலை ஆக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் மருத்துவமனையில் இருந்து நேராக சென்னைக்கு அழைத்து செல்லப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சசிகலா அவர்கள் கடந்த சில நாட்களா மூச்சு திணறல் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார்.இதனையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் சசிகலா சிகிச்சை பெறும் பெங்களூரு சிவாஜிநகர் அரசு மருத்துவமனைக்கு டிடிவி தினகரன் வருகை தந்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் டிடிவி தினகரன். செய்தியாளர்களின் சந்திப்பின் போது, சசிகலா நலமாக இருப்பதாகவும் அவர் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறினார்.

சசிகலாவின், உடல்நிலை சீராக இருப்பதாக சிறைத்துறை மூலம் அதிகாரபூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், சசிகலாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் கூறினார். சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா, வரும் 27-ஆம் தேதி விடுதலையாகும் நிலையில் நேற்று அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

மேலும் விடுதலையாக சில தினங்களே இருப்பதால் சசிகலா அவர்கள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சைப்பெற்ற படியே நேரடியாக சென்னைக்கு அழைத்து வர அதிகபடியான வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.