சென்னையில் காவலர்கள் குடும்பத்துடன் முதல்வரின் பொங்கல் கொண்டாட்டம்
tamilnadu
ops
cheenai
By Jon
சென்னையில் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த பொங்கல் விழாவை தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி, காவலர்கள் குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாடினார்.
பரங்கிமலையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடந்து வரும் பொங்கல் விழாவில் முதல்வர் பழனிசாமி பங்கேற்றார். அத்துடன் கயிறு இழுக்கும் போட்டி உட்பட நடன நிகழ்ச்சியை தொடங்கி வைத்ததுடன் காவலர்களின் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தார்.
இந்நிகழ்வில் டிஜிபி திரிபாதி, சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.