சவரனுக்கு ரூ.2,536 சரிவு.., இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?(14-10-2026)
இன்றைய ( அக்டோபர் 14) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,536 வரை குறைந்துள்ளது.
நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.13,685க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.1,09,480க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாகக் குறைந்து, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.95 குறைந்து ரூ.13,590க்கும், சவரனுக்கு ரூ.760 குறைந்து ரூ.1,08,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 குறைந்து ரூ.11,165க்கும், சவரனுக்கு ரூ.600 குறைந்து ரூ.89,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.245க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,45,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.