''ஏமாற்றுபவர்கள் முன்னேற மாட்டார்கள்'' - சமந்தாவை குத்திக் காட்டுகிறாரா சித்தார்த்?

samantha siddharthtweet
By Irumporai Oct 03, 2021 04:01 PM GMT
Report

டிகை சமந்தா விவாகரத்து நடிகர் சித்தார்த் ட்விட்டரில் மறைமுகமாக பதிவிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சமந்தாவும், நாக சைத்தன்யாவும் கடந்த 2017, அக்டோபர் 7-ம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர்.

கோவாவில் இவர்களின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்தது. இந்த நிலையில் சமந்தா கடந்த ஜூலை மாதம் ட்விட்டரில் தனது பெயரை ‘எஸ்’ என மாற்றியவுடன் நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்யவிருப்பதாக தகவல்கள் வலம் வந்தன.

ஆனால் இது குறித்து அவர்கள் இருவரும் வாய் திறக்காத காரணத்தால் வெறும் வதந்தியாகவே இருந்த நிலையில் சமந்தா - நாக சைத்தன்யா இருவரும்.தாங்கள் இருவரும் பிரிவதாக அறிவித்தது, ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில் சமந்தா கணவரை பிரிந்த நிலையில் ட்விட்டரில் பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார் நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பதிவில் :

பள்ளியில் ஆசிரியரிடம் நான் கற்றுக்கொண்ட முதல் பாடங்களில் ஒன்று, ஏமாற்றுபவர்கள் ஒருபோதும் முன்னேற மாட்டார்கள் எனக் குறிப்பிட்டிருக்கிறார். சித்தார்த்தின் இந்த பதிவு சமந்தாவை மனதில் வைத்துத்தான் பதிவிட்டு இருப்பதாக ட்விட்டர் வாசிகள் விமர்சித்து வருகின்றனர்.