விற்பனைக்கு வந்துள்ள உலகின் மிகவும் மலிவான வீடு; வெறும் ரூ.83 மட்டுமே - சுவாரஸ்ய தகவல்!

United States of America World
By Jiyath Aug 20, 2023 07:34 AM GMT
Report

வெறும் 1 டாலர் மதிப்பில் வீடு ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது.  

மலிவான வீடு

அமெரிக்காவின் மிச்சினில் உள்ள வீடு ஒன்று அண்மையில் 1 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.83 ) என்ற மலிவு விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளது .

விற்பனைக்கு வந்துள்ள உலகின் மிகவும் மலிவான வீடு; வெறும் ரூ.83 மட்டுமே - சுவாரஸ்ய தகவல்! | Cheapest House On Sale In America For 1 Dollar

இந்த வீடு டெட்ராய்ட் நகருக்கு வெளியே சுமார் 30 மைல் தூரத்தில் அமைந்துள்ளது. இது 'உலகின் மலிவான வீடு' என்று அழைக்கப்படுகிறது. இந்த வீட்டில் இரண்டு படுக்கையறைகளும், ஒரு குளியலறையும் உள்ளது. 742 சதுர அடியில் இந்த வீடு அமைந்துள்ளது.

1 டாலர் மட்டுமே

இதுகுறித்து என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் தங்களது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 'கடந்த 2022ம் ஆண்டு இந்த வீடு சுமார் 4 டாலருக்கு விற்கப்பட்டத்து என்றும் உலகின் மலிவான இல்லத்தை அறிமுகப்படுத்துகிறோம் என்றும் தெரிவித்துள்ளது.

விற்பனைக்கு வந்துள்ள உலகின் மிகவும் மலிவான வீடு; வெறும் ரூ.83 மட்டுமே - சுவாரஸ்ய தகவல்! | Cheapest House On Sale In America For 1 Dollar

மேலும் மிச்சிகனில் உள்ள போண்டியாக் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த வீடு, 'இது ஒரு வீடு மட்டுமல்ல - வாழ்நாள் முழுவதும் ரியல் எஸ்டேட் சாகசத்திற்கான டிக்கெட் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.