ஒரே இடத்தில் 4 சுப கிரகங்கள் - கோடிகளில் புரளப்போகும் அந்த 3 ராசிகள்!
விருச்சிக ராசியில் 4 சுப கிரகங்களின் இணைப்பு நடைபெற உள்ளது.
செவ்வாய், புதன் ஆகியோர் விருச்சிக ராசியில் உள்ளனர். நவம்பர் 16 ஆம் தேதி முதல் சூரிய பகவானும் விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் நவம்பர் 20 ஆம் தேதி சந்திரனும் விருச்சிக ராசியில் நுழைகிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் சிறப்பு நன்மைகளை அனுபவிக்க உள்ளனர்.
விருச்சிகம்
செல்வமும், செழிப்பும் கணிசமாக அதிகரிக்கும். வாழ்வில் மகிழ்ச்சி பெருகும். ஏழ்மை நீங்கி செல்வந்தராகும் வாய்ப்புகள் கிடைக்கும். நிதி நிலைமை வலுவடையும். கணிசமான செல்வத்தை குவிப்பீர்கள். பதவி மற்றும் கௌரவத்தை அடைவதற்கான வாய்ப்புகள் உண்டு.
துலாம்
திடீர் நிதி ஆதாயங்களுக்கான வாய்ப்புகள் உண்டு. நல்ல திட்டங்களில் பணத்தை முதலீடு செய்வீர்கள்.புதிய தொழிலை தொடங்க திட்டமிட்டபவர்களுக்கு இந்த காலகட்டம் சாதகமாக இருக்கும். அரசு வேலை வாய்ப்பு அல்லது அரசாங்க நிதி உதவிக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
ரிஷபம்
வாழ்க்கையில் மகிழ்ச்சி வேகமாக அதிகரிக்கும். மனம் மற்றும் உடல் ரீதியான அழுத்தங்கள் நீங்கும். நீண்ட காலமாக நிலவி வந்த குடும்ப தகராறுகள் முடிவுக்கு வரும். தொழிலில் எதிர்பாராத லாபங்கள் எதிர்பார்க்கப்படும். வேலை நிமித்தமாக செல்லும் பயணங்கள் மூலம் நிதி ஆதாயங்கள் உண்டாகும். வாழ்க்கை துணையுடனான உறவு நன்றாக இருக்கும்.