கொழுந்தன் மீது காதல்! கணவரை கொடூரமாக கொன்ற மனைவி!
சத்தீஸ்கரில், பெண் ஒருவர் மைத்துனர் மீது ஏற்பட்ட காதலால், கணவரை கொலை செய்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் பால்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் பெண், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி வந்தார்.
அதன் பிறகு அந்த பெண்ணுக்கு அவரின் கணவனின் தம்பி மீது காதல் மலர்ந்துள்ளது. இதனால் கணவன் இல்லாத நேரத்தில அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர்.
இந்த பழக்கம் தொடர்ந்து கொண்டே இருக்க, ஒரு நாள் இதனை அந்த கணவர் கண்டுபிடித்து மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி கணவனை அதிகமாக மது அருந்தவிட்டு, தூக்கத்தில் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.
மேலும் பொதுமக்களிடம் அவரின் அண்ணியோடு அவருக்கு கள்ள உறவு இருந்ததாகவும், அதனால் அவரது அண்ணி அவரை கொலை செய்துவிட்டதாகவும் கதை கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மனைவி கொலை செய்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை கைது
செய்து சிறையில் அடைத்தனர்.