இனி 'சாட்ஜிபிடி கோ' சேவை இலவசம் - என்ன செய்ய வேண்டும்?
ChatGPT Go செயலியை ஒரு வருடம் இலவசமாக பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ChatGPT Go
பெங்களூருவில் நவம்பர் 4ஆம் தேதி முதல் ஓபன் ஏஐ நிறுவனத்தின் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதற்கிடையில், சாட்ஜிபிடி கோ செயற்கை நுண்ணறிவு செயலியை

இந்தியர்கள் ஒராண்டுக்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என ஓபன் ஏஐ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்த சலுகை 4ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
ஓராண்டுக்கு இலவசம்
கடந்த ஆகஸ்ட் மாதம் சாட்ஜிபிடி கோ செயலியை அறிமுகப்படுத்திய ஓபன் ஏஐ நிறுவனம், பின்னர் அதை 399 ரூபாய் சந்தா செலுத்தி பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியது.

மேலும், சாட்ஜிபிடி ஃப்ரீ-யை விட சாட்ஜிபிடி கோ-வில் அதிநவீன அம்சங்கள் உள்ளதாகவும், ஜிபிடி 5 மாடலில் இது வேலை செய்வதால் பயனர்கள் அதிவிரைவாக தகவல்களை பெற முடியும் என்றும் தெரிவித்துள்ளது.