எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது

By Irumporai Sep 01, 2022 09:43 AM GMT
Report

நவீன தமிழிலக்கியத்திற்கு பெருமை சேர்த்த முன்னோடி படைப்பாளுமைகளைக் கவுரவிக்கும் விதமாக விஷ்ணுபுரம் விருது கடந்த 2010ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. 

விஷ்ணுபுரம் விருது

அந்தவகையில் தற்போது 2022 ம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருது எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு வழங்கப்படுகிறது. மேலும் விருது தொகையாக 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.   

எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு  விஷ்ணுபுரம் விருது | Charu Nivedita Elected For 2022 Vishnupuram Ward

இவ்விழா வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இது பற்றி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட எழுத்தாளர் ஜெயமோகன், "நாற்பதாண்டுகளாக தொடர்ச்சியாக இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டுவரும் சாரு நிவேதிதா தமிழில் மரபான அனைத்தையும் சமன்குலைக்கும் பிறழ்வெழுத்தின் முன்னோடியான படைப்பாளி.

சாரு நிவேதிதா

இந்திய இலக்கியக் களத்திலேயே எல்லா வகையிலும் பிறழ்வெழுத்தை முன்வைத்தவர் என அவரையே சொல்லமுடியும். இலக்கியக் கட்டுரைகள், பத்தி எழுத்துக்கள் வழியாக பிறழ்வெழுத்தின் வகைமைகளையும் அதன் ஆசிரியர்களையும் தமிழில் அறிமுகம் செய்தவர்.

எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு  விஷ்ணுபுரம் விருது | Charu Nivedita Elected For 2022 Vishnupuram Ward

இசையிலும் பிறழ்வெழுத்துக்கு இணையான சமன்குலைக்கும் வகைமாதிரிகளை அறிமுகம் செய்தவர். தன்வரலாறும் புனைவும் கலந்த எழுத்து அவருடையது. தன் வரலாற்றையும் தன்னையும் புனைந்து புனைந்து அழித்துக்கொள்ளும் இவ்வகை எழுத்து தமிழுக்கு அனைத்து வகையிலும் புதியது" என்று குறிப்பிட்டுள்ளார்.