நகைச்சுவை ஜாம்பவன் சார்லி சாப்ளினின் மகள் காலமானார்..!

Death California
By Thahir Jul 23, 2023 05:05 AM GMT
Report

நகைச்சுவை ஜாம்பவன் சார்லி சாப்ளினின் மகள் வயது மூப்பு காரணமாக உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளனர்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் 

சார்லி சாப்ளினின் மகளும், நடிகையுமான ஜோசஃபின் சாப்ளின் மார்ச் 28, 1949 ஆம் ஆண்டு கலிபோர்னியாவின் சாண்டா மோனிகாவில் பிறந்தார்.

இளம் வயதிலேயே தனது தந்தை நடிப்பில் 1952 ஆம் ஆண்டு வெளியான லைம்லைட் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

Charlie Chaplin

இதை தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்திய ஜோசஃபின் நீண்ட இடைவெளிக்கு பின்னர், 1976 ஆம் ஆண்டு வெளியான A Countess from Hong Kong என்கிற படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

20 க்கும் குறைவான திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ள ஜோசஃபின் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள தன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார்.

வயது மூப்பு காரணமாக காலமானார்

நிகோலஸ் சிஸ்டோவரிஸ் (Nicholas Sistovaris) என்பவரை, 1969 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர், 1977-யில் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.

Charlie Chaplin

பின்னர் 1989 ஆம் ஆண்டு ஜீன் கிளவுட் கார்டின் (Jean-Claude Gardin) என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர் 2013 ஆம் ஆண்டு இறந்தார்.

74 வயதாகும், ஜோசஃபின்னுக்கு 3 மகன்கள் உள்ளனர். மேலும் சமீப காலமாக வயது மூப்பு காரணமாக உடல்நலம் இன்றி அவதிப்பட்டு வந்த இவர் ஜுலை 13 ஆம் தேதி உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளனர்.