தேர் விபத்து தொடர்ச்சியாக நடக்க அரசு அதிகாரிகளே காரணம் : கொந்தளித்த அண்ணாமலை

BJP K. Annamalai
By Irumporai Jul 31, 2022 12:18 PM GMT
Report

புதுக்கோட்டையில் நடைபெற்ற அம்மன் கோவில் திருவிழாவில் தேர் கவிழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது, இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் :

தேர் விபத்து

இன்று காலை புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற அரைக்காசு அம்மன் பிரஹதாம்பாள் கோவில் தேர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது என்ற செய்தி கவலை அளிக்கிறது.

தேர் விபத்து தொடர்ச்சியாக நடக்க அரசு அதிகாரிகளே காரணம் : கொந்தளித்த அண்ணாமலை | Chariot Accidents Government Officials Annamalai

தமிழகத்தில் சமீபத்தில் தஞ்சை, தர்மபுரி, உளுந்தூர்பேட்டை எனத் தொடர்ச்சியாகத் தேர் விபத்துகள் நடைபெற்று வருகிறது. இன்று புதுக்கோட்டையில் நடந்த தேர் விபத்தில் 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

அண்ணாமலை கவலை

தமிழக பாஜக சார்பாக மாவட்ட தலைவர் திரு செல்வன் அழகப்பன் அவர்கள் காயமடைந்த சகோதர சகோதரிகளை நேரில் சந்தித்துள்ளார். அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கும் இந்து சமய அறநிலையதுறையின் திறனற்ற செயற்பட்டாலும் இது போன்ற தேர் விபத்துகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

காயமடைந்த மக்களுக்கு நிவாரணமாக 5 லட்சம் ரூபாய் உடனடியாக திமுக அரசு வழங்க வேண்டும் என்பது தமிழக பாஜகவின் கோரிக்கை ஆகும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.