பரபரக்க வைக்கும் 216 பக்கங்கள் - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்..!

AIADMK Pudukkottai
By Thahir May 22, 2023 07:10 AM GMT
Report

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது 216 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம் 

தமிழக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவருடைய வீடுகளில் கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் அடிப்படையில் புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் 216 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கை லஞ்ச ஒழிப்பு துறையால் இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

charge sheet filed against c.vijayabaskar

தமிழக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 17 10 2021 ஆம் ஆண்டு புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவருடைய வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

குற்றப்பத்திரிக்கை தாக்கல் 

இது 35 கோடியே 79 லட்சத்து 90 ஆயிரத்து 81 ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவருடைய மனைவி ரம்யா ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

charge sheet filed against c.vijayabaskar

இந்த வழக்கு மீதான விசாரணை லஞ்ச ஒழிப்பு துறையால் போலீசாரால் தொடர்ந்து நடைபெற்று வந்தது இந்த நிலையில் இன்று புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்கங்களைக் கொண்ட குற்ற பத்திரிக்கையை தாக்கல் செய்தனர்.